சிலாங்கூரில் 688 கோயில்கள் தனியார் மற்றும் அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கிறது என்றால் அந்த கோயிலின் நிர்வாகத்திற்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இசுலாமிய மதப் போதகரான FIRDAUS WONG தெரிவித்துள்ளார்.
மேலும் கோலாலம்பூரில் 163 கோயில்கள் அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக கூட்டரசு அமைச்சர் HANNAH YEOH தெரிவித்துள்ள நிலையில் அமைச்சு சம்மந்தப்பட்ட கோயில் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று FIRDAUS WONG வலியுறுத்தினார்.
இந்த கோயில்கள் பெரும்பாலும் மலாய்காரர்களின் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாக FIRDAUS WONG குற்றம் சாட்டினார்.
சிலாங்கூர் அரசு கோலாலம்பூர் நகராண்மைக் கழகமும் விரைந்து அனைத்து கோயில்களையும் ஆய்வு செய்ய வேண்டும். சம்மந்தப்பட்ட கோயில் பதிவு செய்யவில்லை என்றால் அவர்களுக்கு மின்சாரமும் நீர் வசதியும் எப்படி வழங்கப்பட்டது? என FIRDAUS WONG கேள்வி எழுப்பினார்.
நிலத்தை ஆக்கிரமித்து கோயில் கட்டியிருப்பது போல மின்சாரத்தையும் நீரையும் அவர்கள் எப்படி பெற்றனர்? யார் அவர்களுக்கு உடந்தையாக இருந்தது என சமய போதகரான FIRDAUS கேள்வி எழுப்பினார்.
