இராணுவத்​துக்​காக அதி​கம் செல​விடும் நாடுகள் பட்​டியலில் 5ஆவது இடத்​தில் இந்தியா

இராணுவத்​துக்​காக அதி​கம் செல​விடும் நாடுகள் பட்​டியலில் 5ஆவது இடத்​தில் இந்தியா உள்​ளது.

சுவீடன் நாட்​டைச் சேர்ந்த ஸ்டாக்​ஹோம் அனைத்து உலக அமைதி ஆய்​வுக் கழகம் ​(எஸ்​ஐபிஆர்ஐ) வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யுள்​ள​தாவது: 2025ஆம் ஆண்​டில் இந்​தியா தனது இராணுவத் தேவைக்​காக 92.1 பில்​லியன் அமெரிக்க டொலர்​களை செல​விட்​டுள்​ளது. இது முந்​தைய ஆண்டை விட 8.9% அதி​க​மாகும்.

ஒபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை, எல்​லைப் பகு​தி​களில் நில​வும் பதற்​றம் ஆகிய​வற்​றின் காரண​மாக இராணுவத்தை தயார் நிலை​யில் வைத்​திருப்​பதை உறு​திப்​படுத்த இந்தியா தனது பாது​காப்​புச் செல​வு​களை கணிச​மாக உயர்த்​தி​யுள்​ளது. உலகளா​விய இராணுவச் செலவினங்களில் இந்​தி​யா​வின் பங்கு 3.2 சதவீத​மாக உள்ளது.

92.1 பில்​லியன் அமெரிக்க டொலர்​களை 2025இல் செல​விட்டு இந்​தப் பட்​டியலில் 5ஆம் இடத்தை இந்​தியா பிடித்​துள்​ளது. இந்த வரிசை​யில் முதலிடத்​தில் அமெரிக்கா​வும், 2ஆவது இடத்​தில் சீனா​வும், 3ஆவது இடத்​தில் ரஷ்​யா​வும், 4ஆம் இடத்தில் ஜேர்​மனி​யும் உள்​ளன. அமெரிக்கா 1,480 பில்லியன் அமெரிக்க டொலர்​களை​யும், சீனா 336 பில்​லியன் அமெரிக்க டொலர்​களை​யும் ராணுவத்​துக்​காக செலவிட்டுள்​ளது.

இராணுவத்​துக்​காக அதி​கம் செல​விடும் நாடு​கள் பட்​டியலில் பாகிஸ்​தான் தற்​போது 31ஆவது இடத்தில் உள்ளது. இவ்​வாறு அந்த அறிக்​கை​யில்​ கூறப்பட்டுள்​ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles