சிங்கப்பூரில் டோட்டோ அதிர்ஷ்டக் குலுக்கில் ஒருவர் கிட்டத்தட்ட க$13 மில்லியன் பரிசை வென்றிருக்கிறார்.
நேற்று திங்கட்கிழமை இரவு நடத்தப்பட்ட அந்தக் குலுக்கில் 7, 18, 19, 30, 36, 48, உபரி எண் 11 – என்ற எண்களைக் கொண்ட சீட்டு $12,813,283 பரிசைத் தட்டிச் சென்றது. குரூப் – 1இற்கான பரிசுத்தொகை அது.
அந்தச் சீட்டு ‘குவிக்பிக்’ சாதாரணப் பிரிவில் வாங்கப்பட்டது என சிங்கப்பூர் பூல்ஸ் இணையத்தளம் குறிப்பிட்டிருந்தது. குரூப்-2இல் 17 சீட்டுகளுக்குப் பரிசு கிடைத்தது. அந்தச் சீட்டு ஒவ்வொன்றுக்கும் $87,000 இற்கும் மேற்பட்ட பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப்படும்.
ஏப்ரல் மாதக் குலுக்கல்களில் யாரும் குரூப் – 1 பரிசை வெல்லாததால் அந்தத் தொகை முதலில் கூ 1.2 மில்லியனாகவும் பின்னர் கS5.7 மில்லியனாகவும் அதிகரிக்கப்பட்டு, இறுதியில் க$12.80 மில்லியன் என அறிவிக்கப்பட்டது.
குலுக்கில் வெளியான அனைத்து எண்களையும் கொண்ட சீட்டுக்கே குரூப்-1 பரிசு வழங்கப்படும். அந்தப் பரிசை தொடர்ச்சியாக நான்கு குலுக்கல்களில் யாரும் வெல்லாவிட்டால் அதன் பின்னர் குரூப்-2 சீட்டுகளுக்கு அது பகிர்ந்து அளிக்கப்படும்.
