எயார்பஸ் விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் அழிப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் 12ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தியோகபூர்வ கடிதம் இன்று சனிக்கிழமை 09 தங்காலை கார்டன் இல்லத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.
2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டபோது இலஞ்சம் பெறப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
