சீனாவின் பரிசு பொருட்களை குப்பையில் வீசிய டிரம்ப்!

டொனால்ட் ட்ரம்ப் சீனாவுக்கு சென்ற நிலையில் சீனாவில் இருந்து மீண்டும் அமெரிக்கா புறப்பட்டபோது சீனாவில் கிடைத்த பரிசு பொருட்களை குப்பை தொட்டியில் வீசப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் பரவி வருகின்றன .

சீனாவில் இருந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் விமானம் முன்பு பெரிய குப்பை தொட்டி வைக்கப்பட்டு இருந்தது. அதில் சீனா வழங்கிய பரிசு பொருட்கள், பர்னர் போன்கள், பேட்ஜ்கள் என அனைத்தும் வீசப்பட்டன.
அதன் பின்னரே டிரம்ப் உள்ளிட்ட குழுவினர் அங்கிருந்து புறப்பட்டனர்.

தற்போது சீனா உளவு பார்ப்பது, ரகசிய கண்காணிப்பு உள்ளிட்டவற்றில் தீவிரமாக செயல்பட்டு வருவது தெரிந்ததே.

இதனால் சீனா ஏதாவது ஒரு பொருள் வழியாக தங்களின் நடவடிக்கை, செயல்பாட்டை உளவு பார்க்கலாம் என்ற அச்சம் அமெரிக்க தலைவர்களிடம் உள்ளது.

இதனால் சீனாவில் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு அதிபர் அல்லது அமெரிக்க அரசின் முக்கிய அதிகாரிகள் புறப்படும்போது அந் நாட்டின் பொருட்களை அங்கேயே விட்டு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இது வழக்கமான நடைமுறைதான். வெள்ளை மாளிகை பாதுகாப்பு மற்றும் சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகளின் அறிவுரையின்படி இது பின்பற்றப்பட்டுள்ளது. இதுபற்றி நியூயார்க் போஸ்ட் நிருபர் எமிலி குடின் டுவிட்டரில்,

”சீன அதிகாரிகள் வழங்கிய அடையாள அட்டை, பர்னர் போன்கள், பின்கள் அனைத்தையும் விமானத்தில் ஏறும் முன் அமெரிக்க ஊழியர்கள் சேகரித்து குப்பையில் வீசினர். சீனாவில் இருந்து எதையும் கொண்டு வர அனுமதி வழங்கப்படவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.

பொதுவாக சீனா வழங்கும் பொருட்களை குப்பை தொட்டியில் வீசுவது திரைமறைவில் நடந்து வந்த நிலையில் தற்போது அது வெளிப்படையாக நடந்ததால் புகைப்படங்கள் இணையதளங்களில் பரவி வருகின்றன

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles