நாட்டில் இனவாதம், மதப் பிரிவினை தலைதூக்க இடமளியோம் – அரசாங்கம்

அரசியல் இலாபத்துக்காக நாட்டில் இனவாதத்தையும் மதப் பிரிவினையையும் தூண்டுவதற்கு முயற்சிக்கின்றனர் மீண்டும் நாட்டில் ஒருபோதும் இனவாதம், மதவாதம் அல்லது எந்தவொரு சதித்திட்டத்துக்கும் இடமளிக்கப் போவதில்லை என்று பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது சட்டம் தன் கடமையைச் செய்யத் தொடங்கியுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களின் வாரிசுகள், உறவினர்கள் மற்றும் குற்றங்களுடன் தொடர்புடைய அரசியல் குழுக்கள் தற்போது குழப்பத்தில் கலக்கமடைந்துள்ளனர். சட்டத்துக்கு மேல் எவரும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டு வருகிறது.

கடந்த காலங்களில் இனவாதம் தூண்டப்பட்டதன் காரணமாக வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு என ஒட்டுமொத்த நாடும் போரால் பேரழிவைச் சந்தித்தது. இந்த மண்ணில் இலட்சக்கணக்கான மக்கள் தேவையற்ற போரால் உயிரிழந்தனர். அத்தகைய கசப்பான அனுபவங்களை முடிவுக்குக் கொண்டு வந்து மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழக்கூடிய ஒரு நல்லிணக்க சமூகச் சூழல் கடந்த ஓராண்டு காலத்தில் கட்டியெழுப்பட்டுள்ளது.

தேர்தலில் தோல்வியடைந்த மற்றும் தீய எண்ணங்களால் தங்களின் அரசியல் இலாபத்துக்காக நாட்டில் இனவாதத்தையும் மதப் பிரிவினையும் தூண்டுவதற்கு முயற்சிக்கின்றனர். எனினும் இந்த நாட்டில் மீண்டும் ஒருமுறை இனவாதத்தையோ அல்லது மதக் கலவரங்களையோ உருவாக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் எவ்விதத்திலும் இடமளிக்காது – என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles