அரச மரியாதையுடன் பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம்!

இயக்குநர் இமயம்’ என்று அழைக்கப்படும் மூத்த இயக்குநர் பாரதிராஜாவின் உடல், தேனி மாவட்டத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நேற்று உயிரிழந்த அவரின் உடல் இன்று காலை சொந்த மாவட்டமான தேனிக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் பண்ணை வீட்டில் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

வைரமுத்து, சீமான், வெற்றிமாறன், பார்த்திபன், வடிவேலு உள்ளிட்ட திரை மற்றும் அரசியல் பிரமுகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

மாலை 4 மணியளவில் இறுதிச்சடங்கு நடைபெற்றது. அவரது மகள் ஜனனி உள்ளிட்ட உறவினர்கள் நீர்மாலை எடுத்து வந்தனர்.

அதனைத் தொடர்ந்து, 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles