ஈஸ்டர் தாக்குதல்: இரு வழக்குகளின் தீர்ப்பு ஜூலை 31

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான வழக்கு ஒன்றில் ஜூலை 31ஆம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது.

முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறீ பெர்னாண்டோ, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர ஆகியோருக்கு எதிரான வழக்குகளிலேயே இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது.

மனு தாக்கல் செய்த சட்டமா அதிபர் திணைக்களம், தாக்குதல்கள் தொடர்பில் உளவுத்துறை எச்சரிக்கைகள் கிடைத்தும் தாக்குதலை தடுக்கவில்லை. இதன் மூலம் கடமையிலிருந்து தவறினர் என்று கூறியுள்ளது.

இன்றைய தினம் மூன்று நீதிபதிகளை கொண்ட ட்ரயல் அட்பார் இந்தக் கட்டளையைப் பிறப்பித்தது. வாய்மொழி வாதங்கள் இன்று நிறைவடைந்ததையடுத்து, நீதிமன்றம் இதை அறிவித்தது.

இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தொடர்பான வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், இரு வழக்குகளுக்கும் ஒரே நாளில் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles