100 நாட்களுக்கு மேலாக நீடித்த பதற்றத்துக்கு முடிவுகட்டும் வகையில் அமெரிக்காவும் ஈரானும் ஏற்கனவே ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன என்று டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஒப்பந்தம் முழுமையாக கைச்சாத்தாகிவிட்டது. இதன்படி, உலக எண்ணெய் வர்த்தகத்துக்கு முக்கியமான ஹோர்முஸ் நீரிணை வெள்ளிக்கிழமை திறக்கப்படவுள்ளது என்றும் அவர் கூறினார்.
ஜி7 மாநாட்டுக்காக பிரான்ஸ் சென்றுள்ள ட்ரம்ப் அங்கு வைத்தே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்காது என உறுதியளித்துள்ளது. அதனை தீவிரமாகக் கண்காணிப்போம் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இதனிடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன்படிக்கை ஏற்பட்டாலும் ஈரான் அணு ஆயுதங்களைப் பெற அனுமதிக்கப்படமாட்டாது என்று வலியுறுத்தியுள்ளார்.
மறுபுறம், ஈரானின் வெளிவிவகார அமைச்சு அமெரிக்காமீதான அவநம்பிக்கை இன்னும் நீடிக்கிறது. இந்த உடன்படிக்கை பதற்றத்தைக் குறைக்கும் ஓர் ஆரம்பகட்ட நடவடிக்கை மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரான்ஸ், பிரித்தானியா உள்ளிட்ட 20 நாடுகள் இணைந்து கடற்பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் முழு விவரங்களும் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
