பேர்த்திகளை வல்லுறவு புரிந்த தாத்தாவுக்கு 33 ஆண்டுகள் சிறை!

மலேசியாவில் தனது பேர்த்திகளை கடந்த ஆண்டு பாலியல் வல்லுறவு புரிந்தமை மற்றும் உடல் ரீதியாகத் தாக்கிய வழக்கில், 67 வயதான ஒருவருக்கு அமர்வு நீதிமன்றம் 33 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 14 பிரம்படிகளும் விதித்து தீர்ப்பளித்தது.

இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை புரிந்தமை மற்றும் உடல் ரீதியாகத் தாக்கியமை உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுகளை அந்த நபர் ஒப்புக்கொண்டதை அடுத்து, நீதிபதி நேற்று வெள்ளிக்கிழமை இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017-இன் பிரிவு 26 மற்றும் பிரிவு 27-இன் படி, சிறையில் இருக்கும்போது அவருக்கு ஆலோசனை வழங்கப்பட வேண்டும் என்றும், தண்டனைக் காலம் முடிந்த பிறகு மூன்று ஆண்டுகளுக்கு காவல்துறை கண்காணிப்பில் வைக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இரண்டு பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுகளுக்காக, கடந்த ஆண்டு ஜனவரி மற்றும் டிசெம்பர் மாதங்களில், பத்து பஹாட், பாரிட் ராஜா தெங்கா பகுதியில் உள்ள ஒரு வீட்டில், தனது வளர்ப்புப் பேர்த்தியிடம் இந்தச் செயலைச் செய்தார் என அந்த நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டின் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் பிரிவு 14 (a) மற்றும் அதே சட்டத்தின் பிரிவு 16 ஆகியவற்றின் கீழ் இந்தக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

அந்த முதியவர் மீது, அதே நேரத்தில் மற்றும் அதே இடத்தில் குழந்தையை இரண்டு முறை பாலியல் வன்கொடுமை செய்ததார் எனவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுகள், தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376 (2) (d)-இன் கீழ் பதிவு செய்யப்பட்டன. இதில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படும். கூடுதலாக, கடந்த ஆண்டு அதே இடத்தில் பாதிக்கப்பட்டவரின் ஒன்பது வயது சகோதரியை உடல்ரீதியாக பாலியல் ரீதியாகத் தாக்கியதாகவும் அந்த நபர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles