செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு பணிகளை நீதி அமைச்சர் நேரில் பார்வையிட்டார்

யாழ்ப்பாணம் – செம்மணி – சிந்துப்பாத்தி மயானப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மனிதப் புதைகுழி அகழ்வு பணிகளை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உள்ளிட்ட விசேட குழுவினரும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தின் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினரும் இன்று (19) மாலை நேரில் சென்று பார்வையிட்டனர்.

இதன்போது, அகழ்வு பணிகளின் தற்போதைய நிலைமை, முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் தொடர்புடைய விடயங்கள் குறித்து அதிகாரிகளிடம் அவர்கள் கேட்டறிந்தனர்.

செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகள் மற்றும் அகழ்வு பணிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு மத்தியில் முக்கியத்துவம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles