எடின்பரோவில் இனவெறித் தாக்குதலை மேற்கொண்டவர் கைது!

இங்கிலாந்து – எடின்பரோவில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பல குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார் என ஸ்கொட்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்கு எடின்பரோவில் உள்ள ஒரு மசூதிக்கு அருகில் தாக்குதல்களை ஆரம்பித்த நபர் பின்னர் நகரின் பிற பகுதிகளிலும் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

இந்தத் தாக்குதல்களில் சுமார் ஐந்து பேர் காயமடைந்தனர். அவர்களில் மூவருக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்பட்டது.

இந்நிலையில் “அச்சுறுத்தல்கள், கொள்ளை மற்றும் நாசவேலைகள் உள்ளிட்ட வன்முறைத் தாக்குதல்கள் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், 36 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்துள்ளனர். அவர் உரிய நேரத்தில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அதேநேரம் இந்த தாக்குலை பிரதமர் கெயர் ஸ்டாமர் கண்டித்துள்ளார். இது முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறுப்பால் தூண்டப்பட்டது என்றும், நமது தெருக்களில் யாரும் வன்முறையை எதிர்கொள்ளக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் “சந்தேக நபர் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பால் தூண்டப்பட்டதாகத் தெரிகிறது. இதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன் – அவர் சட்டத்தின் முழு பலத்தையும் எதிர்கொள்வார்.” எனவும் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles