சிங்கப்பூரில் விமானப் பணிப்பெண்ணை மானபங்கம் செய்த இந்தியருக்கு சிறை

சிங்கப்பூரில் விமானப் பணியாளராக வேலை செய்யும் பெண்ணை மானபங்கம் செய்த ஒருவருக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த நபர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தின் உணவறையில் அப்பெண்ணுக்குத் தொந்தரவும் இழைத்திருக்கிறார்.

குற்றவாளியான ஆகா‌ஷ் திவாரி $1,270.95 இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் திங்கட்கிழமை (ஜூன் 22) உத்தரவிடப்பட்டது. அத்தொகையை வழங்காவிட்டால் அவர் கூடுதலாக ஐந்து நாள்கள் சிறைத்தண்டனையை நிறைவேற்றவேண்டும்.

35 வயது திவாரி, மானபங்கம் செய்ததார் எனவும் தொந்தரவு இழைத்ததாகவும் தன்மீது சுமத்தப்பட்ட இரு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

இந்தியாவைச் சேர்ந்த அவர், கடந்தப் பெப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி தாய்லாந்திலிருந்து சிங்கப்பூர் வந்துகொண்டிருந்த விமானத்தில் நண்பர்கள் நால்வருடன் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது அவர்கள் ஒழுங்கின்றி நடந்துகொள்ள ஆரம்பித்தனர்.

பெண் விமானப் பணியாளர்கள் அவ்வழியே நடந்துசெல்லும்போது அவர்கள் கண்டபடி சிரித்துக் கைகாட்டியதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் லிண்டா லீ தெரிவித்தார்.

Previous article
Next article

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles