ரஜினியின் தலைவர் – 173 அதிகாரபூர்வ அறிவிப்பு!

நடிகர் ரஜினிகாந்த்தின் 173ஆவது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் – 2 திரைப்படத்தைத் தொடர்ந்து அடுத்ததாகத் தன் 173அவது படத்தில் நடிக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குவதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், அதனை உறுதி செய்யும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் – அஷ்வத் கூட்டணியில் உருவாகும் படத்தின் பெயர் நாளை (ஜூன் 24) காலை 10 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அறிவிப்பு போஸ்டரில் மருத்துவர்கள் பயன்படுத்தும் கத்தி உள்ளது. முன்னதாக, நடிகர் ரஜினி இப்படத்தில் சென்னையில் பிரபலமாக இருந்த 5 ரூபாய் டாக்டர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் எனத் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles