வெனிசுலா நிலநடுக்கம்: தனது ஒரு வயது குழந்தையை காப்பாற்றி உயிரிழந்த பிரபல கால்பந்து வீரரின் மனைவி

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் வெனிசுலா நாட்டின் பிரபல கால்பந்து வீரர் ஹெக்டர் பிலோவின் மனைவி அண்ட்ரியா தனது ஒரு வயது மகள் அலனாவை பத்திரமாகப் காப்பாற்றிய நிலையில், உயிரிழந்துள்ளார்.

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த புதன்கிழமை ரிக்டர் அளவில் 7.2 மற்றும் 7.5 ஆக பதிவான அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.

மேலும்,நிலநடுக்கத்தில் கால்பந்து வீரர் ஹெக்டர் பிலோவின் வீடு இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் இருந்த அவரது மனைவி அண்ட்ரியா, தனது ஒரு வயது மகள் அலனாவை பத்திரமாகப் பாதுகாத்துள்ளார்.

இந்நிலையில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிய குழந்தை அலனா உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், அவளைக் காத்த தாய் அண்ட்ரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தன்னுடைய உயிரைக் கொடுத்து மகளைக் காப்பாற்றிய இந்தத் தாயின் தியாகம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles