அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது சொந்தப் படம் மற்றும் கையெழுத்து டன் கூடிய புதிய சிறப்புப் பதிப்பு கடவுச்சீட்டை அறிமுகப்படுத்தியுள்ளார். சமூக வலைத்தள பக்கத்தில் இந்த பாஸ்போர்ட்டின் மாதிரிப் படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்க வரலாற்றிலேயே பதவியில் இருக்கும் ஒரு ஜனாதிபதியின் படம் அதிகாரப்பூர்வ பயண ஆவணத்தில் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்க சுதந்திரப் பிரகடன உரையின் பின்னணியில், ஜனாதிபதி ட்ரம்ப் தனது மேசையில் சாய்வாக நிற்பது போன்ற புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
அதன் கீழே அவரது கையெழுத்தும் பொறிக்கப்பட்டுள்ளது. அடுத்த பக்கத்தில் ஜோன் டம்பல் வரைந்த புகழ்பெற்ற “சுதந்திரப் பிரகடனம்” ஓவியமும், அதனுடன் ஒருங்கிணைந்த அமெரிக்க 250 வாசகமும் அச்சிடப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகை இந்த சிறப்புப் பதிப்பு பாஸ்போர்ட்டிற்கு “தேசபக்தர் பாஸ்போர்ட்” என்று பெயரிட்டுள்ளது. அமெரிக்கா சுதந்திரம் அடைந்து 250 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில் இந்த சிறப்புப் பதிப்பு பாஸ்போர்ட் வெளியிடப்படுகிறது.
