ஈராக் பெண் எம்.பி. வீட்டில் 27 கிலோ தங்கம் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட உள்ளாடைகள் மீட்பு!

ஈராக் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிந்த் அல் அப்பாஸி வீட்டிலிருந்து சுமார் 16.5 பில்லியன் ரொக்கப்பணம், 27 கிலோ தங்கம் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட உள்ளாடைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ள சம்பவத்தால் சோதனைக்கு சென்ற அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் .

ஈராக்கின் தற்போதைய அதிபராக நிசார் அமிடியும், பிரதமராக அலி அல் சைதியும் பதவி வகித்து வரும் நிலையில், நாட்டில் பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் இணைந்து பெரும் நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன.

இதனையடுத்து, இந்த ஊழல்கள் தொடர்பில் உடனடி விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் அலி அல் சைதி அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

தொடர்ந்து, அந்நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு சேவைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், ஊழல் சந்தேகத்திற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளின் இல்லங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நாடு தழுவிய ரீதியில் பெரும் சோதனைகளை முன்னெடுத்தனர்.

சோதனை நடவடிகையில் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதிகாரிகளும் தங்களது வருமானத்திற்கு மிஞ்சிய சொத்துக்களைக் குவித்துள்ளமை அம்பலமாகியுள்ளதுடன், அதிகாரிகள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர்களால் முறையான பதில்களை வழங்கவும் முடியவில்லை.

இந்த ஊழல் தடுப்பு சோதனையின் முடிவில், 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 40 அரச அதிகாரிகள் உட்பட மொத்தம் 47 பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சோதனைகளின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளின் வீடுகளில் இருந்து ஒட்டுமொத்தமாக சுமார் 82.5 பில்லியன் (8,250 கோடி) இலங்கை ரூபா பெறுமதியான பணம் மற்றும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles