ஸ்பைடர்மான் படத்தின் புரோமோ வீடியோவில் நடித்த கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் சம்பளம் குறித்து சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.
மார்வெல் நிறுவனத்தின் தயாரிப்பில் டாம் டாம் ஹாலண்ட், ஸென்டயா, ஜேக்கப் பேட்டலான், மார்க் ருஃபாலோ உள்ளிட்டோர் நடித்துள்ள ஸ்பைடர்மான் – ப்ரான்ட் நியூ டே திரைப்படம், உலகம் முழுவதும் ஜூலை 31 ஆம் திகதியில் வெளியாகிறது. மேலும், இந்தியாவில் சிறப்புக் காட்சியாக ஜூலை 30 ஆம் திகதியே வெளியிடப்படுகிறது.
இந்த நிலையில், படத்தின் புரோமோ வீடியோ ஒன்றையும் சொனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, 39 வினாடிகள் கொண்ட இந்த புரோமோ வீடியோவில் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியும் நடித்திருப்பதும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதனிடையே, 39 வினாடிகள் கொண்ட வீடியோவில் வெறும் 5 வார்த்தைகள் மட்டுமே பேசியுள்ள மெஸ்ஸிக்கு சம்பளமாக 15 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் ரூ. 143 கோடி) வழங்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது.
இருப்பினும், மெஸ்ஸிக்கு ரூ. 143 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக படத் தயாரிப்பு நிறுவனமோ மெஸ்ஸியின் தரப்பிலோ உறுதிப்படுத்தப்பட்ட எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.
