நகுலேஸ்வரத்தில் வெள்ளி திருடிய இருவர் கைது!

இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கீரிமலை – நகுலேஸ்வர சிவன் ஆலயத்தில் 4 கிலோகிராம் வெள்ளி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆலயத்தில் வௌ்ளி களவாடப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் நேற்று (4) முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து விரைந்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் 2 சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

கைதானவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles