பிரெக்ஸிட்டால் நபர் ஒருக்கு 3200 பவுண்ட்ஸ் இழப்பு – மீண்டும் இணைவதே ஒரே வழி

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் இணைய வேண்டும் என முன்னாள் தொழிலாளர் கட்சித் தலைவர் நீல் கின்னொக் தெரிவித்துள்ளார்.

அதுவே நாட்டிற்கு “செய்ய வேண்டிய ஒரே தேசபக்தி செயல்” என்றும் அவர் கூறியுள்ளார்.

பிரெக்ஸிட் ஒரு “தவிர்க்கக்கூடிய பேரழிவு” என்று விவரித்த அவர், விரிவான பொருளாதார, அரசியல், சமூக மற்றும் கலாசார சேதங்களை ஏற்படுத்தியுள்ளது என்றும், இதில் நபர் ஒருவருக்கு ஆண்டுக்கு சுமார் £3,200 பவுண்ட்ஸ் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

சுங்க ஒன்றியம், ஒற்றைச் சந்தை ஆகியவற்றில் மீண்டும் இணைவதையோ அல்லது தொழிலாளர்களின் தடையற்ற நடமாட்டத்தை அனுமதிப்பதையோ தடுக்கும், திட்டங்களை கட்டுப்படுத்தப்பட வேண்டாம் என்றும் அவர் புதிய பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்காலத்தில் நடைபெறும் ஒரு பொது வாக்கெடுப்பில், பிரிட்டன் கணிசமான பெரும்பான்மையுடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் சேர வாக்களிக்கக்கூடும் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் இளைய தலைமுறையினரின் கருத்துக்களைக் கருத்தில் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles