‘ட்ரம்பின் மரணத்தை வேண்டி ஈரானில் கோஷம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்யுமாறு வலியுறுத்தும் பதாதைகள் ஈரானில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று காலை மஷ்ஹத் நகரில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் KILL TRUMP என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

முன்னதாக கமேனியின் இறுதி அஞ்சலியின்போது ஒன்றுக்கூடிய மக்கள் ட்ரம்பின் மரணத்தை வேண்டி கோஷமிட்டிருந்தனர்.

இதற்கிடையே நேட்டோ உச்சிமாநாட்டில் பேசிய ட்ரம்ப் தனக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதை ஒப்புக்கொண்டார். அத்துடன் ஈரானின் கொலை பட்டியலில் தான் முதலிடத்தில் இருப்பதாகவும் கூறினார்.

மேலும் தம்மைக் குறிவைத்து ஒரு படுகொலையை அரங்கேற்றுவதற்கு ஈரான் உளவுத்துறை தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக அமெரிக்க உளவுத்துறைத் தகவல்கள் சுட்டிக்காட்டுவதாகவும், இதன் காரணமாகவே தனது பாதுகாப்பு தற்பொழுது முன்னெப்போதும் இல்லாத வகையில் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles