பதற்றங்களுக்கு மத்தியில் அமெரிக்கா செல்கிறார் ஈராக் பிரதமர்

மத்தியக் கிழக்கில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில் ஈராக் பிரதமர் நாளைய தினம் அமெரிக்கா செல்லவுள்ளார்.

அமெரிக்காவுடனான மூலோபாய உறவுகளை வலுப்படுத்துவதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது . பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்புக்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக, எண்ணெய் மற்றும் எரிவாயு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் ஈராக்கின் ஆயுதப் படைகளை வலுப்படுத்துவது தொடர்பிலும் வொஷிங்டனில் விவாதிக்கப்படும் முக்கிய விடயங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு போட்டி நாடுகளுக்கும் இடையே இராணுவ மோதல்கள் தொடர்வதால், ஈராக் தனது அண்டை நாடான ஈரான் மற்றும் அமெரிக்காவுடனான உறவுகளைச் சமநிலைப்படுத்த முயன்று வருகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles