காசா பகுதியில் இஸ்ரேலிய ஆளில்லா விமானத் தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதல்களில் 14க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சப்ரா பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதை இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதுடன், அவை உள்கட்டமைப்பு வசதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்டதாகவும் கூறியுள்ளது.
இருப்பினும், பின்னர் இஸ்ரேல் ஹமாஸின் ஆயுத உற்பத்தி ஆலை மீது தாக்குதல் நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
