முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள மனு தொடர்பாக, கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடைக்கால மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள மனுவில் தம்மையும் தரப்பினராக இணைத்துக்கொண்டு நீதிமன்றத்தில் கருத்துகளை முன்வைக்க அனுமதி வழங்குமாறும், அந்த மனுவை நிராகரிக்குமாறும் பேராயர் தனது இடைக்கால மனுவின் மூலம் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.
குறித்த மனு தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
