யாழ்ப்பாணம் நகரின் பிறவுண் வீதிப் பகுதியில் நள்ளிரவு வேளையில் வீடுகளுக்குள் இரகசியமாக நுழைந்து, பெண்ணொருவரை கத்தி முனையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றார் எனக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 15ஆம் திகதி பெண்ணொருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், பிறவுண் வீதிப் பகுதியில் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், முறைப்பாடு செய்த பெண்ணின் வீட்டு வளாகத்திற்குள் தான் நுழைந்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
