ஈரானுடன் இனி பேச்சு கிடையாது : அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவிப்பு

ஈரானுடன் எந்தவொரு பேச்சு நடத்துவதற்கு திட்டமிடப்படவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஹோர்முஸ் நீரிணை திறந்த நிலையில் இயங்கிவருகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்தை நிர்வகிப்பதற்காக ஓமான் நாடு ஈரானுடன் ஒப்பந்தம் செய்ய முயன்ற நிலையில், ஓமான் மீது குண்டுவீச்சு நடத்தப்போவதாக டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்திருந்ததாக பிராந்திய அதிகாரிகள் இருவர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், அமெரிக்கா தங்களது நிபந்தனைகளை ஏற்கும் வரை இந்த நீர்வழிப்பாதை மீண்டும் திறக்கப்படாது என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

ஈரான் மற்றும் ஓமான் இடையே பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், சவூதி அரேபியாவிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது டிரோன் தாக்குதல்களை நடத்தியதாக ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் உரிமை கோரியுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles