விசேட தேவையுடைய பல்கலை. மாணவர்களுக்கு யாழில் நிதியுதவி வழங்கினார் பிரதமர்

ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக தெரிவுசெய்யப்பட்ட விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கான நிதியுதவி காசோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு காசோலைகளை வழங்கினார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் பேராதனை பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் 76 விசேட தேவையுடைய மாணவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகள் வழங்கப்பட்டன.

இதன்போது மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர், அவர்களின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால முன்னேற்றங்களுக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

விசேட தேவையுடைய மாணவர்களின் உயர்கல்விப் பயணத்தை ஊக்குவிக்கும் நோக்கில் ஜனாதிபதி நிதியத்தின் மூலம் இந்த நிதியுதவி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles