தெஹிவளை – கஹவதன சிறிசங்கபோ மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று (11) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட கை குண்டுத்தாக்குதலில் 11 மற்றும் 17 வயதான இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து முதல்கட்ட பொலிஸ் விசாரணையில் தெரிவந்துள்ளதாவது, தெஹிவளையில் அதிகாலை இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதல், வேறு ஒரு வீட்டை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், தவறுதலாக அடுத்த வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 11 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் 55 வயதுடைய தந்தையும் படுகாயமடைந்து களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளின்படி, தாக்குதலாளிகள் அருகிலுள்ள மற்றொரு வீட்டையே இலக்காகக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அந்த வீடு, “படோவிட்ட அசங்க” என அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவுடன் தொடர்புடைய போதைப்பொருள் விநியோகஸ்தர் ஒருவருடன் தொடர்புடையதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
எனினும், கைக்குண்டு தவறுதலாக அருகிலிருந்த வீட்டின் மீது வீசப்பட்டதாகவும், அந்த வீட்டிற்குள் இருந்த இரு சிறுவர்கள் உயிரிழந்ததாகவும் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதல் “படோவிட்ட அசங்க” மற்றும் “கொஸ் மல்லி” ஆகியோருடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையிலான மோதலின் தொடர்ச்சியாக இடம்பெற்ற பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தாக்குதலை நடத்திய நபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
