அமெரிக்காவில் செப்.11 பயங்கரவாதத் தாக்குதலின் 25ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அல்-கெய்தா அமைப்பு, ஒசாமா பின் லேடனின் மகன் ஹம்சா பின் லேனிடன் வீடியோவை வெளியிட்டுள்ளது.
அஸ்-சாஹேப் எனப்படும் அல் கெய்தாவின் அதிகாரப்பூர்வ ஊடகத்தில், ஹம்சாவின் முதல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஒசாமா பின் லேடனின் மகன், அடுத்த தலைவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம், 2019ஆம் ஆண்டு அமெரிக்கக் கூட்டுப் படைகள் இணைந்து ஆப்கன் – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நடத்திய தாக்குதலின்போது ஹம்சா கொல்லப்பட்டார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
சுமார் 50 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவுக்கு செப்ரெபர் 11 தாக்குதல்களின் கால் நூற்றாண்டு என்று தலைப்பிடப்பட்டுள்ளது. அல் கெய்தாவின் தலைவர் ஐமன் அல் சவாரியின் முகம் மறைக்கப்பட்ட புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.
ஒரு மோசமான பின்னணியில் ஹம்சா அமர்ந்திருக்கிறார். விரிசல் விட்ட மண் சுவர், வெள்ளை டர்பன் தலையில், கையில் ஒரு துப்பாக்கியுடன் பேசுகிறார். இந்த வீடியோவில் இருப்பது ஹம்சா தானா என்பதை உறுதி செய்ய அமெரிக்கா புலனாய்வுத் துறையினர் அடுத்தக்கட்ட நடவடிக்கை மற்றும் புலனாய்வு விசாரணைகளைத் தொடங்கியிருக்கிறார்கள்.
