நடிகை த்ரிஷா எங்கேயிருக்கிறார்? ராதிகா வெளியிட்ட செல்ஃபி வைரல்!

நடிகை த்ரிஷா எங்கேயிருக்கிறார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் கேட்டுக்கொண்டிருந்த நிலையில் ராதிகா போட்ட பதிவு வைரலானது.

நடிகை ராதிகா சரத்குமார், திடீரென லண்டன் சென்றுள்ளார். அப்போது அவர் நடிகரும், கார் பந்தய வீரருமான அஜீத்குமார் பங்கேற்கும் சில்வர்ஸ்டோர் கார் பந்தயம் நடைபெறும் இடத்துக்கு நேரில் சென்று, ஆச்சரியம் கொடுத்தார்.

லண்டனில் நடைபெறும் மிச்செலின் லே மான்ஸ் கோப்பைச் சுற்றுப் போட்டியில் அஜீத் குமார் பங்கேற்கவிருக்கிறார். அங்கு பயிற்சியில் இருந்த அவரை, நடிகை ராதிகா சந்தித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோக்களையும் ராதிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அதிக லைக்குகளை பெற்றுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகப் பரவியிருக்கிறது.

நடிகர் அஜித்துடனான சந்திப்பை பகிர்ந்த ராதிகா சரத்குமார், அசைக்க முடியாத ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் இலட்சியத்துடன் செயல்பட்டு சாதனையாளராகத் திகழும் அதே வேளையில், எப்போதும் போல அடக்கமாகவும் வசீகரமாகவும் இருக்கும் அஜித்தைப் பார்ப்பது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம்! அவர் ஒரு சிறந்த உத்வேகம் என்று விடியோவுடன் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவைப் பார்த்த அஜித்தின் ரசிகர்கள் பலரும் அதனை பகிர்ந்து வருகிறார்கள். இதற்கு இணையாக அடுத்த செல்ஃபியும் வைரல்.

அது மட்டுமல்ல, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மற்றுமொரு செல்ஃபி புகைப்படத்தையும் அவர் பகிர்ந்திருக்கிறார். அந்த செல்ஃபியில் ராதிகாவுடன் இருப்பது நடிகை த்ரிஷா.

நடிகை த்ரிஷா, மலையாளத் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக லண்டன் சென்றிருக்கும் நிலையில், தற்பாது அங்குச் சென்றிருக்கும் நடிகை ராதிகா அவரையும் சந்தித்துள்ளார்.

தமிழ் நடிகைகள் இருவர், லண்டனில் சந்தித்துக் கொண்டதன் அடையாளமான செல்ஃபியை, இரண்டு நடிகைகளின் ரசிகர்களும் பகிர்ந்து வருகிறார்கள்.

ஏற்கனவே, தமிழக முதல்வர் ஜோசப் விஜய், தொழில் முதலீட்டை ஈர்க்க லண்டன் சென்றிருக்கிறார். அஜித் குமாரும் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்துக்காக லன்டனில் இருக்கிறார். இந்த கார் பந்தயத்தை முதல்வர் விஜய் தொடக்கி வைக்கவும் இருக்கிறார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles