காலி, ஹபராதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிட்டிதுவை பகுதியில் வீடொன்றில் தனியாக வாழ்ந்து வந்த இரு வயோதிபப் பெண்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டு, வீட்டின் பின்புறத்திலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் 82 மற்றும் 87 வயதுடைய திருமணமாகாத ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் எனவும், அவர்கள் இருவரும் சகோதரிகள் எனவும் ஹபராதுவைப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
வீட்டின் பின்புறத்தில் அமைந்துள்ள இரு தனித்தனி இடங்களில் இருந்தே இவர்களது சடலங்களைப் பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.
இந்தக் கொடூர இரட்டைக்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், கொலையாளிகளும் அடையாளம் காணப்படவில்லை.
கொலையாளிகளைக் விரைவாக அடையாளம் கண்டு கைது செய்வதற்காக ஹபராதுவைப் பொலிஸாரும் காலி குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
