தமிழ் வம்சாவளி நவிப்பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு! நெதன்யாகு கண்டனம்!

2026ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு நவநீதம்பிள்ளை தெரிவுசெய்யப்பட்டதற்கு, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பணியாற்றிய தென்னாபிரிக்காவின் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவிபிள்ளை எனப்படும் நவநீதம்பிள்ளைக்கு 2026 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என இன்று (ஒக்.9) அறிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவில் பலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலையை நிகழ்த்தியதாகத் தீர்மானித்த ஐ.நா. குழுவுக்கு நவநீதம்பிள்ளை தலைவராகப் பொறுப்பு வகித்ததார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், அமைதிக்கான நோபல் பரிசுக்கு நவநீதம்பிள்ளை தெரிவுசெய்யப்பட்டதற்கு, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,

“தார்மிக நெறிமுறைகளை நோபல் பரிசு குழு இழந்துவிட்டது. ஒரேயொரு யூத அரசுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைக் கண்டுபிடித்து பரப்புவதிலேயே தனது வாழ்க்கையைக் கட்டமைத்த ஒரு மதவெறியருக்கு அது (நோபல் பரிசு குழு) அதன் உயரிய விருதை வழங்குகிறது.

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பித்துவிடலாம் எனும் நம்பிக்கையில், இஸ்ரேலுக்கு எதிரான நவி பிள்ளையின் பொய்களைப் பயன்படுத்திகொண்ட ஒரு ஊழல் மிகுந்த வழக்கறிஞரை நியாயப்படுத்தியதுதான் அவரது (நவநீதம்பிள்ளை) சாதனையாகும்.

தன்னுடன் பணியாற்றிய சர்வதேச குற்றவியல் நீதிமன்ற ஊழியர்களாலேயே பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட கரீம் கான், இஸ்ரேலுக்கு எதிராக நவநீதம்பிள்ளை பொய்களின் மூலம் ஒரு போலியான வழக்கை உருவாக்கினார்.

நவிப்பிள்ளை பொய்களை வழங்கினார். கான் அவற்றை ஆயுதமாக்கினார். இப்போது, தவறான வழிகாட்டுதல் பெற்ற நோபல் குழு உறுப்பினர்கள், நீதிக்கு எதிராகச் செயல்பட்டு யூதர்களை அரக்கர்களாகச் சித்தரித்த ஒரு பெண்ணை கௌரவிக்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles