தான்சானியாவில் லொறி மீது பஸ் மோதி கோர விபத்து; – 28 பேர் தீயில் கருகி மரணம்!

கிழக்கு ஆபிரிக்க நாடான தான்சானியாவில் பேருந்தும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட தீ விபத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர். தான்சானியாவின் டர் எஸ் சலாம் நகரிலிருந்து எம்பெயா நகரை நோக்கி நேற்று அதிகாலை 30 இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து பயணித்துக் கொண்டிருந்தது.

இதன்போது, மொரோகொரோ – டர் எஸ் சலாம் தேசிய நெடுஞ்சாலையில் எம்பரானி பகுதியில் எதிரே வந்த லொறியுடன் பேருந்து மோதியுள்ளது.

மோதலைத் தொடர்ந்து பேருந்தில் தீப்பற்றியதில், அதில் பயணித்த 28 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப் படையினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles