முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும் முன்னாள் முதற்பெண்மணியுமான ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவில் இதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவரது சட்டத்தரணி அனில் சில்வா நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இதனை அடுத்து, குறித்த விடயம் தொடர்பான அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
