கியூபாவின் முன்னாள் அதிபருக்கு அமெரிக்காவில் பிடியாணை ; சீனா கண்டனம்

கியூபாவின் முன்னாள் அதிபர் ரவுல் காஸ்ட்ரோவுக்கு எதிராக அமெரிக்காவின் புளோரிடா மாகாண அரசு பிடியாணை பிறப்பித்துள்ளதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

மறைந்த தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவின் சகோதரரும் கியூபாவின் முன்னாள் அதிபருமான ரவுல் காஸ்ட்ரோவுக்கு எதிராக புளோரிடா மாகாண அரசு பிடியாணை பிறப்பித்துள்ளது.

கடந்த 1994ஆம் ஆண்டு கியூபா மக்கள் அந்நாட்டில் இருந்து தப்பித்து புளோரிடா செல்வதற்கு உதவிய “பிரதர்ஸ் டூ ரெஸ்க்யூ” எனும் அமைப்புக்குச் சொந்தமான 2 விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டது தொடர்பாக ரவுல் காஸ்ட்ரோவுக்கு எதிராக கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் அடிப்படையில், 95 வயதான கியூபா முன்னாள் அதிபர் ரவுல் காஸ்ட்ரோவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்படுவதாக, புளோரிடாவின் அரசு வழக்குரைஞர் கடந்த திங்களன்று (ஒக்.19) அறிவித்தார்.

இந்த நிலையில், கம்யூனிஸ்ட் நாடான கியூபா உடன் நெருங்கிய உறவுகளைக் கடைபிடித்து வரும் சீன அரசு, முன்னாள் அதிபர் காஸ்ட்ரோவுக்கு எதிரான பிடியாணைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, கியூபாவுக்கு வழங்கப்படும் அனைத்து விதமான அழுத்தங்களையும் அமெரிக்க அரசு உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும் சீனா வலியுறுத்தியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles