தீயை அணைக்க இனி தண்ணீர் தேவையில்லை – அறிவியல் உலகை வியக்க வைத்த மாணவி

தண்ணீர் அல்லது இரசாயனங்கள் எதையும் பயன்படுத்தாமல், வெறும் ஒலி அலைகளை (Sound waves) மட்டுமே கொண்டு தீயை அணைக்கும் புதிய தொழில்நுட்பக் கருவியை மெக்சிகோவைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.

மெக்சிகோவின் தமோலிபாஸ் மாகாணம் அல்தாமிரா பகுதியைச் சேர்ந்த 17 வயது மேல்நிலைப் பாடசாலை மாணவியான ஏஞ்சலா வெனகாஸ் ஹெர்னாண்டஸ் என்பவரே இந்த விசித்திரமான தீயணைப்புக் கருவியை உருவாக்கியுள்ளார்.

இவர் உருவாக்கியுள்ள இந்தத் தீயணைப்புக் கருவியில் 12 வோல்ட் பற்றரி, அதிர்வெண் ஜெனரேட்டர் (Frequency Generator), ஸ்பீக்கர் மற்றும் ஆம்ப்ளிபையர் போன்ற பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதில் உள்ள ஜெனரேட்டர் ஒரு வினாடிக்கு 30 டிஜிட்டல் அலைகளை உருவாக்கி, அதிவேக ஒலி அலைகளாக மாற்றிக் குழாய் வழியாக வெளியேற்றுகிறது.

அவ்வாறு குழாயில் இருந்து வெளிவரும் ஒலி அலைகள் சிறிய வளையங்களாக (Vortex Rings) உருமாறி, தீப்பற்றி எரியும் இடத்தில் உள்ள ஒட்சிசனை உடனடியாக வெளியேற்றுவதன் மூலம் தீயை அணைக்கிறது.

இந்தோனேசியாவில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த கண்டுபிடிப்பிற்கு உயரிய தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மெக்சிகோவில் மாகாண மற்றும் தேசிய அளவிலான பல பரிசுகளையும் இந்த மாணவி தட்டிச் சென்றுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles