ரணில் – சஜித் கை கோர்த்தாலும் எமது அரசை அசைக்க முடியாது! – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் ஒன்றாகக் கைகோர்த்தாலும் எமது தேசிய மக்கள் சக்தி அரசை ஒருபோதும் கவிழ்க்க முடியாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளின் சாத்தியமான அரசியல் கூட்டணிகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

“கடந்த காலங்களில் நாட்டைச் சீரழித்த பழைய அரசியல் கலாசாரத்தை நிராகரித்தே மக்கள் தற்போதைய அரசுக்குத் தெளிவான ஆணையை வழங்கியுள்ளனர்.

மக்களின் இந்த ஆதரவை நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாத அச்சத்தினாலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவும் மீண்டும் இணைவது குறித்துப் பேசி வருகின்றனர்.

பழைய தலைவர்களும் நிராகரிக்கப்பட்ட அரசியல் சக்திகளும் மீண்டும் ஒன்றாக இணைந்தாலும், மக்களுக்காகச் செயற்படும் எமது அரசை ஒருபோதும் கவிழ்க்கவோ அல்லது அசைக்கவோ முடியாது.” – என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles