அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹலோவின் கொண்டாட்டத்தின்போது வெடித்த வன்முறையின் ஒரு பகுதியாக இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஹலோவின் கொண்டாட்டத்தின்போது வெடித்த வன்முறையில் சிக்கி 24 பேர் உயிரிழந்ததுடன் 94 பேர் காயமடைந்ததாகவும் பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வன்முறை மற்றும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இந்தத் துப்பாக்கிச் சூடுகள் கலிபோர்னியா முதல் டெலாவேர் வரை பரவியிருந்ததாகவும்அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
