மலேசியாவில் பால்குடம் எடுத்த முஸ்லிம் இளைஞருக்கு நீதிமன்றம் தண்டனை!

பத்துமலை கோயிலில் பால்குடம் ஏந்தியதற்காக முஸ்லிம் இளைஞர் ஒருவருக்கு 3 மாதங்கள் மசூதியில் துப்புரவு பணிகளை மேற்கொள்ளும்படி ஷரியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளளது.

Aliff Daniel எனும் 21 வயதான இஸ்லாமியர் கடந்த 2024 ஜனவரி சிலாங்கூர் பத்துமலை கோயிலில் பால்குடம் ஏந்தியதை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அபராதம் விதித்ததாலும் சிறை தண்டனை வழங்கப்பட்டாலும் இது போன்ற செயல்கள் தவிர்க்கப்படாது என்பதால் இஸ்லாமிய போதனைகளை அவர் முழுமையாகக் கற்க வேண்டும் என்றும் மசூதியில் 3 மாதங்கள் துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தன் மீதான் குற்றத்தைக் குற்றம்சாட்டப்பட்டவர் ஒப்புக் கொண்டதால் அவருக்குச் சிறை தண்டனையோ அபராதமோ விதிக்கப்படவில்லை என் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீங்கள் உங்கள் மதம் சொல்வதை மட்டும் பின்பற்றுங்கள். பிறர் மத நம்பிக்கையில் தலையிடவும் அதனை செயல்படுத்துவதும் கூடாது என ஷரியா நீதிமன்ற நீதிபதி Aliff Danielக்கு வலியுறுத்தினார்.

இளம் வயது இஸ்லாமியர்கள் முழுமையாக இஸ்லாத்தை அறிந்திருக்க வேண்டும் என்கிற ஷரியா சட்டத்தை மீற கூடாது என நீதிமன்றம் இந்த வழக்கின் வாயிலாகச் சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் இது போன்ற இஸ்லாத்தை இழிவுப்படுத்தும்படியான செயல்களில் ஈடுபட வேண்டாம் என ஷரியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles