Sangathy
Sports

குஜராத்துடன் இன்று மோதல்: பிளே ஆப் சுற்று ஆர்வத்தில் ஐதராபாத் அணி..!

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 66-வது ‘லீக்’ ஆட்டம் இன்று இரவு 8.30 மணிக்கு நடக்கிறது. ஐதராபாத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் அணி 7 வெற்றி, 5 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணி குஜராத்தை வீழ்த்தி 8-வது வெற்றியுடன் பிளே ஆப் சுற்றுக்கு நுழையும் ஆர்வத்துடன் இருக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 2 அணிகள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று இருந்தது. 3-வது அணியாக ஐதராபாத் இன்று தகுதி பெறலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

ஐதராபாத் அணியில் டிரெவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, கிளாசன் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும், கேப்டன் கம்மின்ஸ், நடராஜன், புவனேஸ்குமார் போன்ற சிறந்த பந்து வீச்சாளர்களும் உள்ளனர்.

சுப்மன்கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. அந்த அணி தனது கடைசி ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி 6-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.

Related posts

Nuthyangana, Sewwandi and Methtananda named in Sri Lanka’s squad for women’s Asia Cup

Lincoln

முன்னணி வங்கியில் 383.4 மில்லியன் ரூபா மோசடி; வங்கி ஊழியருக்கு விளக்கமறியல்

Lincoln

We aren’t trying to settle scores against Sri Lanka says Pandya

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy