Sangathy
World Politics

கொசுக்களுக்கு Blood Donate செய்யும் நபர் : யார் சாமி நீ..!

விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கோ, ஆபரேசனின்போது ரத்தம் தேவைப்படுபவர்களுக்கோ ரத்த தானம் வழங்குவது இயல்பு. மருத்துவ வளர்ச்சியையும் தாண்டி இந்த ரத்த தானம் ஒரு மனிதாபிமான உதவியாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் உயிரியலாளர் ஒருவர் கொசுக்களுக்கு தன் மன விருப்பத்தின்படி ரத்ததானம் அளிப்பது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல உயிரியலாளர் பெரன் ரோஸ். கொசுக்களை குறித்தும் அதனின் இனப்பெருக்கம், ஆயுட்காலம் உள்ளிட்டவை குறித்து ஆராய்ச்சி செய்கிறார். இதற்காக ஆய்வகம் ஒன்றை அமைத்து கொசுக்களை அதிகளவில் உற்பத்தி செய்து வருகிறார். இதனால் அவரை ‘கொசு மனிதன்’ எனவும் செல்லமாக அழைக்கிறார்கள். இந்தநிலையில் கொசுக்களின் உணவுக்காக அவர் தன் கையையே நீட்டி ரத்தத்தை தானமாக கொடுக்கிறார்.

அவரின் கையை மொய்க்கும் கொசுக்கள் கூட்டம் கண் இமைக்கும் நேரத்தில் ரத்தத்தை உறிஞ்சி குடிக்கிறது. இதுதொடர்பான வீடியோ வலைத்தளத்தில் வெளியாகி 4 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும் வித்தியாசமான கருத்துக்களையும் பெற்று வருகிறது.

Related posts

ரஷ்யாவில் கடும் வெள்ளம் : மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்..!

tharshi

வெனிஸ் நகரை சுற்றிப்பார்க்க கட்டணம் : சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி..!

tharshi

சீனாவில் கனமழை : சாலை இடிந்து விபத்து – 24 பேர் பலி..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy