Sangathy
Sports

வெற்றியுடன் பட்டியலில் முதலிடம் பிடித்த தென்னாப்பிரிக்கா அணி..!

ரி20 உலகக் கிண்ண தொடரில் இன்று (24) காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 135 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் Roston Chase அதிகபட்சமாக 52 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் தென்னாப்பிரிக்கா அணி சார்பில் Tabraiz Shamsi 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இந்நிலையில் போட்டியின் நடுவே மழை குறுக்கிட்டதால் 17 ஓவர்களில் 124 ஓட்டங்கள் தென்னாப்பிரிக்கா அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதற்கமைய 124 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 16.1 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி சார்பில் Tristan Stubbs அதிகபட்சமாக 29 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் Roston Chase 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

Related posts

P. de S. Kularatne clinch title

Lincoln

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் மகளிருக்கான பிரிவில் திருநங்கையர் போட்டியிட தடை

Lincoln

இலங்கை – பங்களாதேஷ் தொடரில் இருந்து சந்திமால் திடீர் விலகல்..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy