Sangathy
World Politics

சிறுமியின் கோரிக்கைக்கு செவிசாய்த்த எலான் மஸ்க்..!

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரரான எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியில் இந்த நிறுவனம் முன்னிலையில் உள்ளது.

சீனாவைச் சேர்ந்த சிறுமி ஒருவர் டெஸ்லா காரில் உள்ள ஸ்கிரீனில் தான் விரும்பியதை படமாக வரைந்துள்ளார். அப்போது திடீர் திடீரென வரைந்த படங்கள் காணாமல் போகின்றன .. இதனால் அந்த சிறுமி கவலை அடைந்தார். அத்துடன் இது ஒரு பிழை. இதை டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என விரும்பினார்.

தன்னுடைய செயலை ஒரு வீடியோவை எடுத்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு எலாஸ் மஸ்க் டேச் செய்துள்ளார். அதில் ஹலோ மிஸ்டர் மஸ்க், நான் சீனாவின் மோலியில் உள்ளேன். என்னுடைய கேள்வி உங்களுடைய கார் பற்றியது. நான் படம் வரையும்போது, சில நேரங்களில் லைன் இது போன்று (வீடியோவை காட்டி) மறைந்து விடுகிறது. நீங்கள் இதை பார்க்கிறீர்கள் அல்லவா? இதை சரி செய்ய முடியுமா? நன்றி” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதை கவனித்த எலான் மஸ்க் “நிச்சயமாக” என பதில் அளித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் வலைப்பக்கத்தில் கருத்து விவாதங்கள் நீண்டு கொண்டே செல்கின்றன.

Related posts

ஆப்கானிஸ்தானில் கடும் மழை – வெள்ளம் : 300 இற்கும் அதிகமானோர் பலி..!

tharshi

12 வது முறையாக தந்தையானார் எலான் மஸ்க்..!

tharshi

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy