Sangathy
Cinema World

அரசியல் வேறு..சினிமா வேறு..விஜய்க்காக கமல் எடுத்த அதிரடி முடிவு..!

விஜய் GOAT படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் தளபதி 69 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் GOAT திரைப்படம் தயாராகியுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகியிருக்கும் இப்படம் செப்டம்பர் ஐந்தாம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து விஜய் தன் கடைசி திரைப்படமான தளபதி 69 பட வேலைகளை துவங்கவுள்ளார்.

முழுநேர அரசியலில் ஈடுபட தயாராகும் விஜய் தளபதி 69 படத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலக இருக்கின்றார். இந்த அறிவிப்பு ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் விஜய் தொடர்ந்து படங்களில் நடிக்கவேண்டும் என விருப்பப்படுகின்றனர். ஆனால் விஜய் தான் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கின்றார்.

தளபதி 69 தான் தன் கடைசி படம் என்றும், அதன் பிறகு முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் விஜய் முடிவெடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக விஜய்யின் கடைசி திரைப்படத்தை யார் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அதைத்தொடர்ந்து தற்போது அந்த கேள்விக்கான விடை கிடைத்திருக்கின்றது.

எச்.வினோத் தான் விஜய்யின் கடைசி திரைப்படமான தளபதி 69 திரைப்படத்தை இயக்குவார் என உறுதியாகியுள்ளது. அனைவரும் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பிற்காக தான் காத்துகொண்டு இருக்கின்றனர். அநேகமாக செப்டம்பர் மாதம் தளபதி 69 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் தளபதி 69 திரைப்படத்தில் கமல் மிக முக்கியமான ஒரு ரோலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன. துணிவு படத்திற்கு பிறகு எச்.வினோத் கமலை வைத்து ஒரு படத்தை இயக்கயிருந்தார். கமல் மற்றும் எச்.வினோத் கூட்டணி இணைய இருப்பதாக அதிகாரபூர்வமாகவே அறிவிப்பு வெளியானது. ஆனால் ஒரு சில காரணங்களால் அப்படம் நடக்க தாமதமானது.

அதன் பிறகு கமலுக்காக எழுதிய கதையை தான் எச்.வினோத் விஜய்யிடம் கூறி ஓகே செய்திருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. எச்.வினோத் கமலுக்காக சொன்ன கதையில் கமல் நிறைய இன்புட்ஸ் கொடுத்தாராம். எனவே கமலின் இன்புட்ஸ்சுடன் கூடிய கதையை தான் தற்போது விஜய்யிடம் கூறியிருக்கின்றார் எச்.வினோத்.

இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவலின்படி எச்.வினோத் விஜய்யை வைத்து இயக்கவுள்ள தளபதி 69 திரைப்படத்தில் கமல் மிக முக்கியமான ஒரு ரோலில் நடிப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் கண்டிப்பாக விஜய்யின் படத்தில் கமல் நடிக்க வாய்ப்பே இல்லை என சொல்கின்றனர்.

ஏனென்றால் விஜய்யின் தளபதி 69 திரைப்படம் அரசியல் படமாக உருவாகவுள்ளது. அதில் விஜய்யின் அரசியல் கருத்துக்கள் நிறைய இருக்கும் என்றே தெரிகின்றது. விஜய்யை போல கமலும் ஒரு அரசியல் கட்சி தலைவராக இருக்கின்றார். எனவே விஜய்யின் அரசியல் கருத்துக்கள் கொண்ட படத்தில் கமல் எப்படி நடிப்பார் என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்து வருகின்றது.

ஆனால் கோலிவுட் வட்டாரத்தை சார்ந்தவர்கள் சிலரோ ? கமல் விஜய்யுடன் நடித்தாலும் ஆச்சர்யப்படுதற்கில்லை. கமல் எப்போதும் சினிமா வேறு, அரசியல் வேறு என்ற கருத்தை கொண்டவர். எனவே அவர் விஜய்யுடன் நடிக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றது என்கின்றனர். இந்நிலையில் விஜய்யும் கமலும் தளபதி 69 இணைந்து நடிப்பார்களா ? இல்லையா ? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

அம்பானி வீட்டு கல்யாணத்தில் நடனமாடி கொண்டாடிய ரஜினிகாந்த்..!

Tharshi

சூப்பர் ஸ்டார் பட நடிகையின் அம்மா மீது மோகம் : ஷூட்டிங்கில் ஆசை காட்டி மோசம் செய்த காமெடி நடிகர்..!

Lincoln

துல்கர் சல்மானுக்கு பதிலாக சிம்பு.? : ஆண்டவரின் ‘தக் லைஃப்’ படத்தில் அதிரடி மாற்றம்…!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy