Sangathy
World Politics

புண்ணு ஆறிடுச்சு.. டிரம்ப்பின் எஸ்டேட்டில் நேதன்யாகு : காசா பேச்சுவார்த்தை என்னாச்சு..!

பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டு அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்து போர் குறித்து பேச்சுவார்த்தை நடந்தினார். பிரதமர் நேதன்யாகுவுக்கு எதிராக அமெரிக்க தெருக்களில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீன ஆதரவாளர்கள் திரண்டுஅவரது உருவ பொம்மை மற்றும் அமெரிக்கக் கோடியை எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அமைதி பேச்சுவார்த்தையை விரும்புவதாக அமெரிக்கா கூறி வந்தாலும் இஸ்ரேலுக்கு அதிகளவில் அமெரிக்கா நிதி வழங்கிவருகிறது. இதற்கிடையில் அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடக்க உள்ள நிலையில் ஆளும் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகக் கமலா ஹாரிஸும், குடியரசுக் கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் களமிறங்கியுள்ளனர்.

எனவே தங்களுக்கான சாதக பாதகங்களைக் கணக்கில் வைத்து இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, இன்று டொனால்டு டிரம்பையும் அவரது எஸ்டேட்டில் வைத்து சந்தித்து பேசியுள்ளார். கடைசியாக டிரம்ப் அதிபராக இருந்த சமயத்திலேயே நேதன்யாகு அவரை சந்தித்திருந்தார். இந்நிலையில் வெகு காலம் கழித்து நடந்த இந்த சந்திப்பில் காசாவில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் குறித்து விரிவாக உரையாடியுள்ளார்.

அப்போது இந்த பிரச்சனையை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர நேதன்யாகுவிடம் டிரம்ப் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. ஆனால் அதற்கு நேதன்யாகு திட்டவட்டமாக மறுத்துள்ளார் என்றும் எஸ்டேட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருந்து டிரம்ப் உயிர்பிழைத்த நிலையில் அவரது காதில் குண்டு பாய்ந்ததால் ஏற்பட்ட காயம் குறித்து கேட்டறிந்தார். அப்போது தனது காதில் இருந்த புண்ணை நேதன்யாகுவுக்கு காட்டி விளக்கம் கொடுத்தார் டிரம்ப்.

Related posts

இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனம்..!

tharshi

தென்னாப்பிரிக்காவில் பேருந்து விபத்து : 45 பேர் பலி..!

tharshi

காஸாவின் ரஃபா நகரை குறிவைக்கும் இஸ்ரேல்..!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy