Sangathy
Cinema World

பிரஞ்சு சினிமாவின் பழம்பெரும் நடிகர் அலைன் டெலோன் காலமானார்..!

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பழம்பெரும் நடிகரும் ஆரம்பக்கால பிரஞ்சு சினிமாவின் ஸ்டைல் ஐகானாக திகழ்ந்தவருமான அலைன் டெலோன் [Alain Delon] [88 வயது] உடல்நலக்குறைவு காரணமாக நேற்று[ஆகஸ்ட் 18] காலமானார்.

உலக சினிமாவில் புரட்சியை ஏற்படுத்திய பிரஞ்சு நியூ வேவ் சினிமாட்டிக் இயக்கத்தின் முக்கிய முகங்களும் ஒருவராக திகழ்ந்தவர் அலைன் டெலோன். ‘பர்பில் நூன்’ [1960], ‘லே சாமுராய்’ [1967] உள்ளிட்ட படங்கள் மூலம் அலைன் டெலோன் உலகப் புகழ்பெற்றார்.

2019 ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பிறகு அவர் நிலை மோசமடைந்து வந்தது. இதற்கிடையில்கேன்சர் நோயுடனும் போராடி வந்த அவர் நேற்று அதிகாலை தனது வீட்டில் மனைவி மற்றும் 3 குழந்தைகள் சூழ அமைதியான முறையில் உயிரிழந்துள்ளார்.

அலைன் டெலோனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்,

“சிறப்பு வாய்ந்த பாத்திரங்களை ஏற்று நடித்து உலகைக் கனவு காண வைத்தவர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உலகம் முழுவதிலும் உள்ள இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related posts

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி..!

Lincoln

வேட்டையன் அப்டேட்

Lincoln

தவெக கட்சிக்கு அங்கீகாரம் அளித்தது இந்திய தேர்தல் ஆணையம் : அதிகாரப்பூர்வமாக அறிவித்த விஜய்

Tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy