Sangathy
Sports

டெஸ்ட்டில் சிறந்த பேட்ஸ்மேன் கோலியா? ரூட்டா? : கில்கிறிஸ்ட் விளக்கம்..!

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் 12000 ரன்களை கடந்த அவர் 34 சதங்கள் அடித்துள்ளார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்த அவர் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் ஆகிய 4 வீரர்களையும் மிஞ்சியுள்ளார்.

அதனால் விரைவில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட் உடைப்பார் என்ற கருத்துக்கள் எழுந்துள்ளன. அத்துடன் விராட் கோலியை விட ரூட் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என்று மைக்கேல் வாகன் போன்ற அந்நாட்டின் முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் ஜோ ரூட்டை விட விராட் கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

“ஜோ ரூட்டின் புள்ளிவிவரங்கள் சிறப்பாக இருக்கிறது. அதே போல் விராட் கோலியின் புள்ளிவிவரங்களையும் நான் பார்க்கிறேன். இதை நான் இயன் சேப்பல், ரிக்கி பாண்டிங் போன்ற ஆஸ்திரேலியர்கள் பார்வையில் பார்க்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 பேட்டிங் சராசரி மகத்துவத்திற்கான பெஞ்ச மார்க் அல்லவா?

அதே சமயம் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் நான் விராட் கோலியை தேர்ந்தெடுப்பேன். ஜோ ரூட் நீண்ட காலமாக இங்கிலாந்தின் சிறந்த வீரராக செயல்பட்டு வருகிறார். இருப்பினும் ஆஸ்திரேலியாவில் அவர் சதமடித்துள்ளதாக எனக்குத் தெரியவில்லை.

ஆனால் விராட் கோலி ஆஸ்திரேலியாவில் விளையாடிய முதல் போட்டியிலேயே பெர்த் மைதானத்தில் நான் பார்த்த சிறந்த சதத்தை அடித்தார். அந்த வித்தியாசமான சதத்தை அடித்த விராட் கோலியை ஆஸ்திரேலிய மண்ணில் நான் தேர்ந்தெடுப்பேன்.”

என்று கூறினார்.

ஆஸ்திரேலிய மண்ணில் ரூட் 1 டெஸ்ட் சதம் கூட அடித்ததில்லை. ஆனால் விராட் கோலி ஆஸ்திரேலியாவில் 6 டெஸ்ட் சதங்கள் அடித்துள்ளார்.

Related posts

Pace dominates spin in Sri Lankan attack

Lincoln

ஐ.பி.எல். 2024 பஞ்சாப் – மும்பை அணிகளிடையான மோதல் இன்று..!

tharshi

Alfie Hewett and Gordon Reid win wheelchair doubles at Australian Open 2023

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy