Sangathy
News

தனித்தனியாக செயற்பட்டு சமூக உரிமைகளை வெல்ல முடியாது – நஸீர் அஹமட்

Colombo (News 1st) முஸ்லிம் சமூகத்தின் சமகால சவால்களை தீர்த்துவைக்கும் பொதுவான வரைபை தயாரிக்கும் தருணம் வந்துள்ளதாகவும் இனியும் தனித்தனியாகச் செயற்பட்டு சமூக உரிமைகளை வெல்ல முடியாதெனவும் சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்கு ஜனாதிபதி முனைப்புடன் செயற்படுவதை தாம் அறிவதாக நஸீர் அஹமட்டின் ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இழக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகளை மீளப்பெறவும் அதனுடன் தொடர்புடைய ஏனைய பிரச்சினைகள் குறித்தும் பொதுவான வரைபை தயாரிக்க வேண்டியுள்ளதுடன் வடக்கு, கிழக்கில் இருந்து முஸ்லிம்கள் வௌியேற்றப்பட்ட பின்னர் பறிபோன முஸ்லிம்களின் பூர்வீக நிலங்களை மீளப்பெற வேண்டியுள்ளதாகவும் அமைச்சரின் அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 27 வீத முஸ்லிம்கள் வாழ்கின்ற நிலையில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ள பிரதேச செயலகங்களில் 1.3 வீத காணிகளே வழங்கப்பட்டுள்ளதாகவும்
அம்பாறை, திருகோணமலை உள்ளிட்ட வடக்கின் ஏனைய பகுதிகளிலும் இதே நிலைமை காணப்படுவதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லை நிர்ணய அறிக்கையில் சந்தேகங்கள், பாரிய ஆபத்துகள் காணப்படுவதாக சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

முஸ்லிம் சமூகத்தின் சமகால சவால்கள் தொடர்பில் சமூக பிரதிநிதிகளிடம் ஒருமித்த கருத்து நிலவுவது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்தொற்றுமையுடனும் போதிய ஆவணங்களுடனும் முஸ்லிம் பிரதிநிதிகள் ஜனாதிபதியைச் சந்திப்பதற்காக சகல முஸ்லிம் தலைமைகளும் எம்பிக்களும் தங்களது அரசியல் பேதங்களைப் புறந்தள்ளி ஒன்றுபட அழைப்பதாக அமைச்சரின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஒரே தாய்மொழியினராகிய தமிழரும் முஸ்லிம்களும் தொடர்ந்தும் பிணக்குகளுக்குள் சிக்கியிருப்பது சிறுபான்மை சமூகங்களை ஈடேற்றாது என்பதையே வரலாறு உணர்த்தியிருப்பதாக அமைச்சர் நஸீர் அஹமட் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

President to form a committee to recommend suitable state hospitals for clinical training for private medical students

Lincoln

PAFFREL wants Speaker to act

Lincoln

CBSL Bill passes muster with SC

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy