Sangathy
BusinessLatest

சொந்தமாக 10 வீடுகள் இருந்தும் குப்பை அள்ளும் கோடீஸ்வரர்..!

சொந்தமாக பத்து வீடுகள் இருந்தாலும் கோடீஸ்வரர் ஒருவர் குப்பைகளை சேகரித்து தனக்கு தேவையான உணவை பெற்றுக் கொள்கிறார்.

பொதுவாக பெரிய கோடீஸ்வரர்கள் என்றாலே தங்களிடம் இருக்கும் பணத்தை எதாவது முதலீடு செய்வார்கள், ஆடம்பரமான வீட்டை வாங்குவார்கள். இன்னும் சிலர் எதாவது பயணம் செய்ய வேண்டும் என்று செலவு செய்வார்கள். அப்படி தான் நாம் பார்த்திருப்போம். ஆனால், நாம் இங்கு பார்க்க போகிறவர் சற்று வித்தியாசமானவர்.

ஜேர்மனியில் வசிக்கும் கோடீஸ்வரர் ஹெயின்ஸ் பி (Heinz B). இவரை பார்த்தால் நாம் அவ்வளவு பணம் இவரிடம் உள்ளதா என்று நினைக்க முடியாது. ஆனால், இவர் வாழும் வாழ்க்கையானது வீடில்லாமல் ஒரு மனிதன் வாழ்ந்தால் எப்படி இருக்குமோ அப்படி உள்ளது.

இவருக்கு சொந்தமாக பத்து வீடுகள் இருந்தாலும் குப்பைகளை சேகரித்து தனக்கு தேவையான உணவை பெற்றுக் கொள்கிறார். இவர் மாதத்திற்கு உணவுக்கு மட்டுமே ரூ.450 தான் செலவு செய்கிறார். சில நேரங்களில் தான் சேகரிக்கும் குப்பைகளில் இருந்து தனக்கான உணவை ஏற்பாடு செய்து கொள்கிறார்.

இவர் கூறுவது என்னவென்றால், மக்கள் ஒரு குடும்பத்திற்கே தேவையான அளவு உணவை தினமும் வீணடிக்கிறார்கள் என்பது தான்.

இந்த கோடீஸ்வரரின் சொத்து மதிப்பை பொருத்தவரை, 2021 -ம் ஆண்டில், 7 வீடுகள் மற்றும் 2 அடுக்குமாடி குடியிருப்புகளை வைத்திருந்தார். மேலும், வங்கியில் இருந்த ரூ.4 கோடியை பயன்படுத்தி வீடு வாங்கி, தற்போது 10 வீடுகளுக்கு சொந்தக்காரராக உள்ளார்.

இதை தவிர Fixed Deposit -ல் ரூ.90 லட்சம் வைத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், மாதத்திற்கு ரூ.3 லட்சத்து 23 ஆயிரம் ஓய்வூதியம் பெறுகிறார். அதோடு, மற்றொரு ஓய்வூதியத்தில் ரூ.14 ஆயிரம் பெறுகிறார். இவை எல்லாம் இருந்தும் ஹெயின்ஸ் பி ஒரு யாசகரை போல சைக்கிளில் பயணிக்கிறார்.

Related posts

மர்மமான முறையில் வைத்தியர் உயிரிழப்பு..!

Lincoln

LOLC Al-Falaah wins multiple golds at the slibfi-awards 2022

Lincoln

பாகற்காய் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்பவரா நீங்கள்..!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy