Sunday, February 8, 2026
Homeஇன்றும்(10) பல பகுதிகளில் பலத்த மழை - வளிமண்டலவியல் திணைக்களம்

இன்றும்(10) பல பகுதிகளில் பலத்த மழை – வளிமண்டலவியல் திணைக்களம்

Colombo (News 1st) மேல், சபரகமுவ மற்றும் வட மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல பகுதிகளில் இன்று(10) 75 மில்லிமீட்டர் மழை பெய்யக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் கூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், இடி மின்னலினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பதுளை, காலி, கண்டி,கேகாலை, குருணாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட முதற்கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular